TamilsGuide

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்- நடிகை ரம்யா

சினிமா துறையில் சமீபகாலமாக கதாநாயகர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

தமிழில் 'குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான ரம்யாவும் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ரம்யா பங்கேற்று பேசும்போது, ''என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். நான் முதலில் என்னைவிட குறைவான சம்பளம் பெறும் நடிகர்களோடு பணியாற்றியபோது அந்த படம் ஹிட்டானதும், அந்த நடிகர்களின் அடுத்த படங்களுக்கு என்னைவிட ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.

நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் தந்தார்கள். நாங்களும் நடிகர்கள் வேலையை செய்யும்போது இவ்வளவு சம்பள வித்தியாசம் ஏன் வருகிறது.

இப்படி சினிமா துறையில் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தாலும், அதை யாரும் தைரியமாக சொல்ல முன்வருவது இல்லை. வித்யாபாலன் திறமையான நடிகை. அவருக்கு கூட நடிகர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை'' என்றார்.

கன்னட சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் அதிகமாக வர வேண்டும். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப ஒத்துப்போகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, வலுவான கதைசொல்லல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துமாறு நடிகைகளை அவர் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment