TamilsGuide

கணேமுல்ல சஞ்சீவ விவகாரம் - சந்தேக நபர்களுக்கான விளக்மறியல் நீடிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் திருமதி தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று (07) முன்னிலையான போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment

Comment