TamilsGuide

இங்கிலாந்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி - தமிழனாக Double சந்தோஷம் என கார்த்திக் ராஜா பெருமிதம்

லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாவின் இசையில் தமிழக மக்கள் அவ்வளவு உருகி இருக்கிறார்கள்.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம், அவங்க ஊருக்கே போய் 'டேக்கா காண்பிப்பது' என்று சொல்வாங்கல... அதுபோல நான் செஞ்சு காமிக்கிறேன்டா என்று நம்ம ஊரு ஆளு போகும்போது எனக்கு ஒரு தமிழனாக double சந்தோஷம்.

உலக அளவில் தமிழ் இசையை கொண்டு செல்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

நானும் ஒரு சராசரி ரசிகன் தான். என்னை வேறு மாதிரி பார்க்காதீங்க. என் அப்பாவும் அப்படி தான் டிரீட் பண்ணுவாங்க.

மகன் என்ற அன்பு இருக்கும். மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு தெரியும்... நீ சும்மா இரு... என்று சொல்லி விடுவாங்க.

சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா நிறைய பேர் இருப்பார்கள். அது அவர்களின் பாரம்பரிய இசை. அதில் நுணுக்கமாக செய்வது கடினம்.

அப்பாவுக்கு முன்னாடி இருந்தே செய்யணும் ஆசை. அதை இப்போ சிறப்பா பண்ணிட்டாங்க.

எனக்கு அந்த இசையை கேட்கணும் என்று ஆசை. அதை கேட்கும்போது தமிழ் மக்களும் கூட இருக்கணும் என்பது ஒரு ஆசை. may be இங்கேயும் வந்து அதை perform பண்ணுவாங்க என்று நினைக்கிறேன் என்று கூறினார்.


 

Leave a comment

Comment