TamilsGuide

இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த SK

லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கினார்.

இதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் மனமார்ந்த வாழ்த்துகளை நேரில் பெற்றதில் மகிழ்ச்சி என்று இளையராஜா தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment