TamilsGuide

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்கள் மீட்பு

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விமான நிலையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக மொபைல் போன்களை கடத்த முயன்றார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

துபாயில் இருந்து வந்த சந்தேக நபரின் மூன்று பொதிக்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மொத்தம் 111 உயர் ரக மொபைல் போன்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment