TamilsGuide

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 341 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும்,
அவர்களில் 34, 006 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 4,85,102 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment