TamilsGuide

யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment