TamilsGuide

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளம் பெண்கள் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர  முற்பட்ட  இரு பெண்களை  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள்  இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்துக்  கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை மற்றும் நாரம்மல பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 23 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடமிருந்து  சுமார் மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்கள்  சிகரெட்டுகளை கொண்டுவருவதற்காகவே சுற்றுலா விசாக்களின் மூலம் டுபாய்க்குச் சென்றுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment