ஒண்டாரியோ லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில், போனி கிராம்பி தொடர வேண்டும் என்று ஏகமனதாக ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஒண்டாரியோ லிபரல் கட்சியின் நிர்வாகக் குழு இந்த ஆதரவினை வெளியிட்டுள்ளது. அவர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிராம்பி தோல்வியைத் தழுவியிருந்தார்.
எனினும், அவரது தலைமையின் கீழ் கட்சி மீண்டும் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை பெற்றதைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி 14 ஆசனங்களை வென்று, ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகாரப்பூர்வ கட்சியாக என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேர்தலில் மூன்றாவது அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஒண்டாரியோ மக்கள் லிபரல்களுக்கு வாக்களித்தனர்.
கட்சியை வழிநடத்த போனி கிராம்பியைவிட திறமையானவர் வேறு இல்லை என லிபரல் கட்சி தவிசாளர் கேத்ரின் மெக்காரி, தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிராம்பி நிர்வாக குழுவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, கட்சியை தொடர்ந்து வழிநடத்த உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.


