TamilsGuide

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த 9 வயது சிறுமி உயிரிழப்பு

ஹெட்டிபொல, மகுலகமவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு (27) உயிரிழந்துள்ளார்.

சிறுமியும் அவரது பாட்டியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி மகுலகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அதேநேரம், காயமடைந்த பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த சிறுமியின் சடலம் குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​காட்டுப்பன்றிகளை வேட்டையாட மக்கள் உரத்த குரலில் சத்தம் போட்டதைக் கேட்டு சிறுமியும் அவரது பாட்டியும் தங்கள் வீட்டிற்கு வெளியே வந்தனர்.

இதன்போது, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 12 போர் ரக துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரைக் கண்டறிய ஹெட்டிபொல பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment