முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு இன்று (28) விசேட உரை ஒன்று நிகழ்த்தவுள்ளார்.
இந்த உரையானது புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
இதேவேளை குறித்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளதுடன் தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும்.
மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன் குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றதுடன் மார்ச் 2 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.