கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் வின்னைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.
காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் வின்னைத்தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் 1000 நாட்களை கடந்து இன்றும் ஓடிக்கொண்டி இருக்கிறது. இன்றும் வார இறுதியில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறித்து சிம்பு மற்றும் திரிஷா படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, இப்பட வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளனர்.


