TamilsGuide

கனடாவுக்கு பிரச்சினையை உருவாக்கும் வெள்ளை மாளிகை அலுவலர் 

கனடா அடிபணிந்தால் ஒழிய, விடக்கூடாது என அமெரிக்க தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டுள்ளதுபோலிருக்கிறது.

ஆம், Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற வெள்ளை மாளிகை மூத்த அலுவலர் ஒருவர் அழுத்தம் கொடுத்துவருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்க விரும்புவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

பின்னர் பொருளாதாரத்தை பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாகவும் மிரட்டினார் ட்ரம்ப்.

தற்போது, வெள்ளை மாளிகை மூத்த அலுவலர் ஒருவர் இன்னொரு வழியில் அழுத்தம் கொடுத்து கனடாவை அடிபணிய வைக்க முயற்சிகளைத் துவக்கியுள்ளார்.

உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ (Peter Navarro) என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்துவருகிறார்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த மாதம், அதாவது, மார்ச் மாதம் 9ஆம் திகதி தனது பிரதமர் பதவியிலிருந்து விலகும் நிலையில், அடுத்து கனடாவுக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எனலாம். 
 

Leave a comment

Comment