TamilsGuide

ஸ்ருதி ஹாசன் நடித்த ஹாலிவுட் படத்தின் 'த்ரில்' டிரெய்லர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாக வளம் வரும் ஸ்ருதி ஹாசன் கடைசியாக பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகி உள்ளது.

'தி ஐ' (The Eye) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனுடன் மார்க் ரவுலி, அன்னா சவ்வா, லிண்டா மார்லோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது. தனித் தீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த தனது காதலனின் அஸ்தியை கரைக்க ஸ்ருதி ஹாசன் முயலும்போது அங்குள்ள உள்ளூர் மக்களால் பின்பற்றப்படும் ஒரு பழங்கால சடங்கினால் சிக்கல் ஏற்படுவதாக கதை நகர்கிறது.

மெலனி டிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர்தற்போது வெளியாகி உள்ளது. சைகோலாஜிக்கல் திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

இந்தியாவில் இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment