TamilsGuide

கிரேண்ட்பாஸில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பிகொடுவ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வீட்டு வாடை தொடர்பான தகராறினால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சம்பத்தில் உயிரிழந்த நபர் வாக்குவாதத்தின் போது, நபர் ஒருவரையும் அவரது மனைவியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் ஆயுதத்தை பறித்து தாக்கியவரை கடுமையாக தாக்கினார்.

காயமடைந்த சந்தேக நபரும் அவரது மனைவியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலகதி விசாரணையை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment