மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலைச் சம்பவம் தொடர்பில் உதவிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.