TamilsGuide

இன்று மகா சிவராத்திரி விரதமாகும்

சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி இன்று பெப்ரவரி 26 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும்.

சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும்.

முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும்.

இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

ஆலயங்களில் நடைபெறும் 4 கால பூஜைகளில் பங்கேற்கலாம் அல்லது உங்கள் வீட்டுகளிலேயே விளக்கேற்றி ஒவ்வொரு கால பூஜையையும் தொடங்கி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

மகாசிவராத்திரி என்பது ஆழ்ந்த பக்தியின் நேரம், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கை.

இந்த புனிதமான இரவில், பக்தர்கள் விரதம், பிரார்த்தனை, மற்றும் அவரது நாமத்தை உச்சரித்து, அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.
 

Leave a comment

Comment