TamilsGuide

சேட்டை பிடிச்ச பையன் சார்.. சுதா கொங்கராவிடம் சிக்கித்தவிக்கும் ரவி மோகன்


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.

இன்று காலையில் சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் படம் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என அதர்வா, ரவி மோகன் ஆகியோர் உடன் செல்ஃபி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது மற்றொரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் சுதா கொங்கரா, அதர்வா மற்றும் ரவி மோகன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் புகைப்படத்தில் ரவி மோகன் மேஜையில் உணவில்லை இரண்டாம் புகைப்படத்தில் தட்டில் உணவுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தலைப்பாக " தான் பராசக்தி திரைப்படத்திற்காக எப்படி சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடலை வறுத்திக் கொண்டு நடிக்கிறேன் என்பது முதல் புகைப்படத்தில் ரவி மோகன் கூறுகிறார் ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் போது இந்த இரண்டாவது புகைப்படத்தை எடுத்தேன்" என பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment