நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.
இப்படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார். ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற் எந்த ஒரு தக்வலும் வெளிவராததால் லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவின.
ஆனால் இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களின் ஸ்கெடியுலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.