TamilsGuide

மித்தெனிய முக்கொலை சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம்திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment