TamilsGuide

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு-கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளார்

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொழும்பு குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment