TamilsGuide

வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றம் இன்று  இந்த தீர்ப்பை வழங்கியது.

அத்துடன் இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் தளர்த்திய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment