TamilsGuide

வேந்தர் பதவியை இராஜினாமா செய்தார் கல்லேல்லே சுமனசிறி தேரர்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், அந்தப் பதவியிலிருந்து  இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.

கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்,  அந்தப் பதவியை விட துறவி சமூகத்திற்குள் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment