TamilsGuide

இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இந்தோனேசிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசிய தலைநகரில் கருப்புக்கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், போராட்ட இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment