TamilsGuide

67 பேர் உயிரிழக்க காரணமான நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்

அமெரிக்கா ரீகன் விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில், விமான நிலையத்தில் பணிபுரியும் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில், விமானம் வெடித்து சிதறி 67 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் 100 இன்ற்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Leave a comment

Comment