TamilsGuide

அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -தயாசிறி ஜயசேகர

அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ”  சட்டத்தரணி போன்று ஆடை அணிந்து வந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இச்சம்பவம்

நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையே காட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இது சிறிய விடயம் அல்ல எனவும்,  இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் விட்டால் பாரிய விளைவை சந்திக்க நேரிடும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

….

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக்  குழுத் தலைவரான கனேமுள்ள சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ள நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 

Leave a comment

Comment