TamilsGuide

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் IMF செயற்குழு பெப். 28 மீளாய்வு

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மீளாய்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை பெப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.

IMF ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி மூன்றாம் மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்குப் பின்னர், இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கும்.

Leave a comment

Comment