TamilsGuide

கிளிநொச்சியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில்  உள்ள வீடொன்றின் மீது  நேற்று (17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த  வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளரைப் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment