TamilsGuide

தங்க வில‍ை தொடர்பான அப்டேட்

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (18) சற்று குறைந்துள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 232,000 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 214,600 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் (14) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 233,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 215,00 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,912.92 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
 

Leave a comment

Comment