TamilsGuide

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை  அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும்  இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் ஷங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ஓமான் மஸ்கட் நகரில் இடம்பெறும் 8 ஆவது இந்து சமுத்திரமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
 

Leave a comment

Comment