உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.
இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.


