TamilsGuide

78-வது பாப்டா விருது - சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு

சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.

இந்நிலையில், 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யபட்டார். தி புரூடலிஸ்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

ஏற்கனவே இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதிலும் புரூடலிஸ்ட் படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment