TamilsGuide

SK23 x ARM படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சங்கிலி செயின் தொங்கிக் கொண்டு இருக்கிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.


 

Leave a comment

Comment