பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.
இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் அறிவித்தார். இதன்பின் ரன்வீர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.
இந்நிலையில் "மகாபாரதம்" சீரியலில் பீமனாக நடித்த முன்னாள் WWE மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார், ரன்வீருக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "ரன்வீரை போன்றவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். நான் அவனை எங்கேயாவது சந்தித்தால், யாரும் அவனை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது" என்று மிரட்டியுள்ளார்.


