TamilsGuide

இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது.

வீதியின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஆம் ஆண்டு இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளைத் ஆரம்பிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்இ இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

இருப்பினும்இ தற்போதைய அரசாங்கம் முன்னுரிமைப் பட்டியலின்படி வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால்இ இந்தத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படிஇ மத்திய அதிவேக வீதியின் குருநாகல்-கலகெதர இடையிலான பகுதிக்கு முன்னுரிமை அளித்து கட்டுமானப் பணிகளைத் ஆரம்பிக்க அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்  பொதுஹெர – ரம்புக்கன பகுதி மற்றும் ரம்புக்கன – கலகெதர பகுதி என மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் இரண்டு பகுதிகளால் மேற்கொள்ளப்படும் எனவும்.

பொத்துஹெர – ரம்புக்கனை பகுதியின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய பிரதி அமைச்சர்இ ரம்புக்கனை – கலகெதர பகுதியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இதற்கிடையில்இ நீண்ட காலமாக தடைபட்டுள்ள கடவத்தை – மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகளை சீன உதவியுடன் மேற்கொள்ளவும்;  திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 

Leave a comment

Comment