TamilsGuide

தலவாக்கலையில் நடமாடும் தண்ணீர் பந்தல்

தலவாக்கலை, கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தைப்பூச வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் பால்குட பவனி மற்றும் காவடி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது “எமது மலையகம்” என்ற அமைப்பின் ஊடாக பக்த அடியார்களின் நலனைக் கருத்திற்கொண்டு தலவாக்கலை நகர மத்தியில் நடமாடும் தண்ணீர் பந்தலொன்று அமைக்கப்பட்டு அனைவருக்கும் மோர் தானம் வழங்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி சேவைகளை முன்னெடுக்கும் நோக்குடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment