TamilsGuide

கனடாவில் வாகனத்தை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

கனடாவில் வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இடோபிகொக் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்திருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 
 

Leave a comment

Comment