TamilsGuide

ஜனாதிபதியி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று ஆகும்.

அதன்படி ஜனாதிபதி இன்று பிற்பகல் உலக அரச உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வில் உரையாற்றவுள்ளார்.

அதன்போது பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த உரையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 

Leave a comment

Comment