தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மற்றும் நடிகர் சூரி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு
ஒளிப்பதிவு - ரவி சக்தி
படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்
இசை - மனு ரமேசன்
கலை - ஷன்முகராஜா
ஆடை வடிவமைப்பு - காயத்ரி
ஸ்டண்ட் - நைஃப் நரேன்
திரைப்படத்தின் மற்ற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


