அமெரிக்காவில் வசித்துவரும் பிரிட்டிஸ் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மோசமானவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்போவதில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அவர் ஏற்கனவே மனைவியால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
ஹரிக்கு எந்த உதவியையும் வெள்ளை மாளிகை வழங்காது
அதேவேளை போதைப்பொருள் பயன்படுத்தியமைக்காக ஹரியை நாடு கடத்தும் திட்டம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள டிரம்ப் ஹரியின் விசாவை இரத்துசெய்வார் என்ற ஊகங்களிற்கு முடிவுகட்டியுள்ளார்.
ஹரி தனது சுயசரிதையில் தான் போதைப்பொருளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார், இது தொடர்பில்அவர் நீண்ட சட்டப்போராட்டத்தினை எதிர்கொண்டுள்ளார்.
நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் டிரம்ப் தலையிடுவாரா என்ற கேள்விக்கு நான் அதனை செய்யவிரும்பவில்லை அவரை தனியாக விட்டுவிடுகின்றேன் அவர் தனது மனைவியால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் மேகன் மோசமானவர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தான் வெற்றிபெற்றால் ஹரிக்கு எந்த உதவியையும் வெள்ளை மாளிகை வழங்காது என டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


