TamilsGuide

இளவரசி கேட்டின் உடையை மோசமாக விமர்சித்த இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியம் ஒருமுறை இளவரசி கேட் அணிந்திருந்த உடை ஒன்றைக் குறித்து மோசமாக விமர்சித்ததாக பிரபல் ஃபேஷன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசி கேட் மூத்த ராஜ குடும்ப உறுப்பினராவதற்கு முன் ஒருமுறை அணிந்திருந்த உடை ஒன்றை மோசமாக விமர்சித்தாராம் இளவரசர் வில்லியம்.

அது அவசர அவசரமாக ரோட்டோரக் கடை ஒன்றில் வாங்கி அணிந்த உடைபோல் இருந்ததாக விமர்சித்துள்ளார் வில்லியம்.

ஆனால், இன்று? இளவரசி அணியும் உடைகளை உற்றுக்கவனிக்கும் மக்கள், அவரை ஒரு ஃபேஷன் ஐகானாக கருதுகிறார்கள். அவர் அணிவதுபோல் உடை அணிய ஏராளம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எந்த உடையை வில்லியம் மோசமாக விமர்சித்தார் என்பது வெளியிடப்படவில்லை.
 

Leave a comment

Comment