விடாமுயற்சி திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
யார்தர்த்தமான திரைக்கதையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக 5 நாட்களை கடந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 136 கோடி வசூல் செய்துள்ளது.
முதல் நான்கு நாட்களில் நல்ல வரவேற்பை வசூலில் பெற்று வந்த நிலையில், நேற்று இப்படத்தின் வசூல் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


