TamilsGuide

ஹட்டனில் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை

தலையில் பலத்த காயங்களுடன் சிறுத்தை ஒன்றின் உடல் இன்று வனவிலங்கு அதிகாரிகளால் கண்டெடுக்கபட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றின் படி சிறுத்தை குட்டியின் வயது மூன்றாக இருக்கலாம் என்றும் வாகனம் மோதி அல்லது தாக்குதல்களினால் மரணம் சம்பவித்து இருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஹட்டன் நீதவானின் உத்தரவின் பேரில் சிறுத்தை குட்டியின் இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய குட்டியின் உடல் ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
 

Leave a comment

Comment