TamilsGuide

67 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது

வொஷிங்டன் அருகே கடந்த வாரம், பயணிகள் விமானம் மீது நேருக்கு நேர் மோதி ஆற்றில் விழுந்த இராணுவ ஹெலிகொப்டர் இராட்சத கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

இவ்விபத்தில் மொத்தம் 67 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

பிளாக் ஹாக் ரக ராணுவ ஹெலிகொப்டர் அனுமதிக்கப்பட்டதை விட 100 அடி உயரமாகப் பறந்ததாலும், ஹெலிகாப்டரை டிராக் செய்ய உதவும் ADS-B தொழில்நுட்பத்தை பைலட்  நிறுத்தியிருந்ததாலும்  இவ் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment