TamilsGuide

அடுத்த ரேஸுக்கு தயார் - டிராக்கில் இருந்து செல்ஃபி வீடியோ பகிர்ந்த அஜித்

நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடித்த திரைப்படம் வெளியானதால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். நேற்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்து இருந்துது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில், 'விடாமுயற்சி' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் தற்பொழுது அவரது ரேசிங் பயிற்சிக்காக போர்சுகலில் உள்ளார். அப்பொழுது அவர் குழுவுடன் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment