கனடாவில் நீண்ட காலமாக இயங்கிய வண்ணம், தமது பிறந்த பதியிற்கான நற்பணிகளை ஆற்றுவதற்கு கருவியாக விளங்கும் 'சுருவில்- மக்கள் ஒன்றியம்- கனடா' நடத்திய வருடாந்த நத்தார் தினக் கொண்டாட்டம் 18-01-2025 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள 'கென்னடி கொன்வென்சன் சென்றர்' மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தற்போதைய நிர்வாகச் சபைத் தலைவர் ஜெயச்செல்வன் பற்குணசிங்கம் அவர்கள் தலைமையில் விழாக்குழுவினர் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மேற்படி சுருவில் பதியில் பிறந்தவர்கள் மற்றும் புகுந்தவர்களாக ஆண்களையும் பெண்களையும் கரம் பிடித்தவர்கள் என பல குடும்பங்கள் கலந்து கொண்டன.
சுருவில் கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாக திருவாளர்கள் திருவருள் கிருஸ்ணபிள்ளை உட்பட சிலர் அங்கு வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெற்றன.
பிறந்த பதியின் நினைவுகளோடு அனைவரும் கொண்டாட்டம் நிறைவுற்ற பின்னர் இல்லம் ஏகினர்


