TamilsGuide

அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் பலி -15 பேர் கைது

அமெரிக்கா கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற எல்லை கடப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த கைதுகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று இடங்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவின் தென் அல்பர்ட் எல்லை பகுதிக்கும் இடையிலான பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

நபர் ஒருவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் போலீசார் துரத்திச் சென்றபோது குறித்த நபர் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்தி உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment