TamilsGuide

12 வருடத்திற்கு பிறகு உணர்ந்த மாற்றம்- ரஜினிகாந்த் பகிர்ந்த ரகசியம்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ்.ராஞ்சி ஆசிரமத்துக்கு சென்றார். அந்த ஆசிரமத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு 3 தடவை வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி வருடாவருடம் இங்கு வந்து, சுமார் ஒரு வாரம் தங்குவது என்று முடிவு எடுத்துள்ளேன்.

நான் மிகவும் 'வைப்' ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் ஒரு 'பாசிட்டிவ் வைப்' வருகிறது என்கிறார்கள். அதன் ரகசியமே நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவது தான்.

2002-ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனாலும் நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், அதாவது 12 வருடங்கள் ஆன பிறகுதான் மாற்றத்தை உணரமுடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி, அமைதி இருந்தது. கிரியா யோகாவின் சக்தி என்பது, அதை தெரிந்துகொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு பரம ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
 

Leave a comment

Comment