TamilsGuide

பொகவந்தலாவை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய இரதோற்சவம்

பொகவந்தலாவை ஈழத்துப் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய மகோற்சவத்தின் 13 ஆவது நாளான இன்று இரதோற்சவம் நடைபெற்றது.

இன்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு உபசார பூஜைகள் நடைபெற்று, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கு சண்முக அர்ச்சனை இடம் பெற்றது.

உற்சவ மூர்த்திகள் ராஜ கோபுர வாசலை எழுந்தருளிய போது உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேத சண்முகர் மற்றும் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி தேர்களில் பொகவந்தலாவை நகரில் உலா வந்தனர்.

மகோற்வத்தை முன்னிட்டு நகரம் விழா கோலம் பூண்டிருந்தது. ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய மகோற்சவ தீர்த்தோற்சவம் நாளை நடை பெறவுள்ளது.
 

Leave a comment

Comment