TamilsGuide

நீர் கட்டணத்தை 30% குறைக்க பரிசீலனை

எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணத்தை 10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அண்மைய மின் கட்டண குறைப்புக்கு அமைவாக நீர் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக NWSDB செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட கட்டண குறைப்பை மதிப்பிடுவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் பரிந்துரைகள் அடுத்த சில நாட்களுக்குள் NWSDB தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும்.

அது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன், அந்த விடயம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பப்படும்.

அதன் பின்னர் அந்த அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment